2018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு

2018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மனித குலத்திற்கு உதவும் வகையில் புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த பிரான்சிஸ் ஹெச். அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனை சேர்ந்த கிரிகோரி பி.விண்டர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts