2019ல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் பிரதமராக பதவி ஏற்பேன்: ராகுல்

 

 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் பிரதமராக பதவி ஏற்பேன் என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த அவர் , பல முக்கிய விஷயங்களில் பிரதமர் மோடி மவுனமாக உள்ளார் என்றும் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், பிரதமராக பதவி ஏற்பேன் என்றும் ராகுல் தெரிவித்தார்.  பிரதமர் பதவி ஏற்பது குறித்து ராகுல், கருத்து தெரிவித்துள்ளது இதுவே முதல்முறையாகும். 

Related Posts