2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த நபராக பிரதமர் மோடி தேர்வு

 

பிரிட்டிஷ் ஹெரால்டு நாளிதழ் இணையம் மூலமாக வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போன்ற 25க்கும் மேற்பட்ட முக்கிய மற்றும் பிரபலமான நபர்கள் இடம் பெற்றிருந்தனர். வாக்கெடுப்பில் வாசகர்களுக்கு வாக்களிக்க ஒருமுறை மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

எந்தவொரு நபருக்கும் எந்தவொரு தலைவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்க முடியாது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 30.9 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இடம் பெற்றுள்ளார். அவர் 29.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 21.9 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார். இறுதியாக, சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 18.1 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

 

 

Related Posts