2019 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: ஜூன் 16ல் இந்தியா – பாக்., மோதல்

 

 

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த ஆண்டு ஜூன் 16ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஏப்ரல்-25

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15-ம் தேதி வரை நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதற்கான போட்டி அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

அதன்படி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. ஜூன் 9ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணி, ஜூன் 13ம் தேதி நியூசிலாந்து அணியை எதர்கொள்கிறது. ஜூன் 16-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறும் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஜூன் 22ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும், ஜூன் 27ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. அடுத்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜூன் 30ம் தேதி இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது. மேலும், ஜூலை 2ம் தேதி வங்கதேச அணியுடனும், ஜூலை 6ம் தேதி இலங்கை அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.

Related Posts