2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும்

2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.

2019 – 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டு உள்ளது. மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். இதற்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவி்க்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியல், ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாக எடுத்து 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பித்தவர்களும் நீட் தேர்வெழுத தகுதியுடையவர்கள் ஆவர். தனித்தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் சுமார் 7 லட்சத்து 97 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

Related Posts