2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, வீராங்கனை வினேஷ் போகட் தேர்வு

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தகுதி பெற்றுள்ளார்.

மகளிருக்கான மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் வெண்கல பதக்கப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதன்மூலம் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு வினேஷ் தகுதி பெற்றுள்ளார். இந்தியா சார்பில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இவரது சகோதரிகள் கீதா போகட், பாபிதா போகட் ஆகியோரும் மல்யுத்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts