2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை விளையாட இலக்கு- சோயிப் மாலிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக், 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் : மே-10

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான சோயிப் மாலிக் 2015-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது சோயிப் மாலிக், வெஸ்ட் இண்டீசில் வரும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கரிபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டியில் கயானா அமாசோன் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சோயிப் மாலிக், 2019-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தனது கடைசி உலக கோப்பை போட்டி என்று தெரிவத்துள்ளார். ஆனால், 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts