2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்

2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

      சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 14-ந் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார்.  மேலும், பி.எஸ்.எல்.வி. பி42, ஜி.எஸ்.எல்.வி.பி2 விண்கலங்கள் அடுத்த ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்படும் எனவும்,கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கான செயலி பருவமழை முடிந்தவுடன் வழங்கப்படும் எனவும் கூறினார். பிரதமர் ஏற்கனவே அறிவித்ததன்படி, 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Related Posts