21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

கடன் தள்ளுபடி உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி சென்ற விவசாயிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

            உத்திரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக  கடன் தள்ளுபடி உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிஷான் கிராந்தி பாத யாத்திரிகை என்ற பெயரில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணியாக சென்றனர். அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக எல்லையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். பேரணியாக வந்த சுமார் 70 ஆயிரம் விவசாயிகள் காசியாபாத் பகுதியில், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து  பேரணியை கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டும் வீசியும், தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Related Posts