21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் : தலைமை தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவித்தார். இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறினார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதியாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நாங்குநேரி, விக்கரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.தேர்தல் பிரச்சாரத்தின்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா கேட்டுக்கொண்டார்.

Related Posts