21 இடங்களில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து

 

 

சென்னை உட்பட 21 இடங்களில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  நான்கு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினரை வெற்றி பெறச் செய்யும் வகையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாகக் கூறி, 31 சங்கங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை பரிசீலித்து, தேர்தலை ரத்து செய்வது பற்றி கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவாரூர், வேலூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 21 இடங்களில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Related Posts