21 நாட்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக துரைமுருகன் அறிவிப்பு

தமிழகத்தில் இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் : ஜூன்-12

வேலூர் மாவட்டம் நெமிலியில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவில் பேசிய துரைமுருகன், இந்தக்கூட்டத்தை நிறுத்த சிலர் முயற்சித்ததாக குற்றம்சாட்டியதுடன், வாரம் ஒரு கூட்டம் இங்கு நடத்தப்படும் என்றும், அதை நிறுத்த யாராலும் முடியாது என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

Related Posts