23ம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான நிலை தெரியும்:  டி.டி.வி.தினகரன் 

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தபோதிலும், சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காரணத்தினால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. தமிழக தலைவர்கள் பலர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை சூலூர் தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரைக் ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்ட அவர், புரட்சி என்கிற வார்த்தை யாருக்கு பயன்படுத்த வேண்டும், என்று தெரியாமல், மதுரையில் எடப்பாடிக்கு புரட்சிபெருந்தகை என்று பெயர் சூட்டியிருப்பதாக விமர்சித்துள்ளார்.

மேலும், துரோகத்திற்க்கு வேண்டுமென்றால், எடப்பாடி பழனிசாமி புரட்சியாளராக இருக்கலாம், என்றும் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.

Related Posts