28 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் விடுதி கட்டப்படும் : அமைச்சர் சரோஜா

மத்திய அரசு மற்றும் உலகவங்கியுடன் இணைந்து, தமிழகத்தில், 4 இடங்களில், நவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள் கட்ட உள்ளதாக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்கள் தங்கும் விடுதியினை அமைச்சர் சரோஜா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 6 ஏக்கர் பரப்பளவில், உலகத்தரத்தில், 28 கோடி ரூபாய் மதிப்பில் பெண்கள் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளதாக அவர் கூறினார். மத்திய அரசு மற்றும் உலக வங்கியும் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Related Posts