3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்லப் போவதில்லை: வெற்றிவேல் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  தங்கள் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்  3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் நீதிமன்றம் செல்லப் போவதில்லை எனவும்,  தேர்தலை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். தங்களது ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் உள்ளதாகவும்  சிலர் அமைச்சர்களாக பதவி வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  அமமுகவுக்கு  ஆதரவாக செயல்பட்டு வருவதாக,  அ.தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபு, விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர். வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதி உறுப்பினர். ரத்தினசபாபதி ஆகிய 3பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து பேரவைத் தலைவரிடம் அதிமுக கொறடா  ராஜேந்திரன் நேற்று புகார்  அளித்தார்.

Related Posts