3 துணை முதல்வர்களை நியமித்தார் எடியூராப்பா

கர்நாடகாவில் 3 துணை முதல்வர்களை அம்மாநில முதலமைச்சர் எடியூராப்பா நியமித்துள்ளார்.

கர்நாடகாவில் பா.ஜ. முதல்வராக எடியூரப்பா உள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்திற்கு துணை முதல்வர்களாக, கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்பா சவடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவிந்த் மக்தப்பா கரஜலுக்கு பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை இலாக்காக்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அஷ்வத் நாராயணுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பாவுக்கு ஊரகவளர்ச்சிதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

லக்ஷ்மண் சங்கப்பா சவடிக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா அமைச்சரவையில் 14 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Posts