3 முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி

3 முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களம் இறங்க உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் நாளைய போட்டியில் இந்திய அணி களம் இறங்க இருந்தது. இந்த நிலையில் முதல் போட்டியில் காயம் அடைந்த பிரித்வி ஷா நாளைய போட்டியில் களம் இறங்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், முதுகுவலி காரணமாக அதிரடி வீரர் ரோஹித் ஷர்மாவும் நாளைய போட்டியில் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் இல்லாமல் நாளை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி களம் இறங்குவது பாதகமான அம்சமாக கருதப்படுகிறது.

Related Posts