30ம் தேதி அமித் ஷா சென்னை வருவது உறுதியாகவில்லை – தமிழிசை

வரும் 30ம் தேதி அமித் ஷா சென்னை வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் 6 இடங்களில் இன்று கரைக்கப்படுகிறது வாஜ்பாய் அஸ்தியை கடந்த 22-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரிடமிருந்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் ஆகியோர்பெற்றுக்கொண்டனர்.

பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் வாஜ்பாய் அஸ்தி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் 6இடங்களில் அதாவது புனித ஆறுகளிலும், கடலிலும் கரைக்கப்பட இருக்கிறது.

இதன்படி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அஸ்தியானது சென்னை பெசன்ட்நகரில் அஷ்டலட்சுமி கோவில் அருகே கடலில் கரைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,

நாட்டிற்காக தன்னலம் இன்றி உழைத்தவர் வாஜ்பாய் எனவும், அவருக்கு  அஞ்சலி செலுத்துவதில் பாஜக பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார். வரும் 30ம் தேதி அமித் ஷா சென்னை வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை என தெரிவித்தார்.

Related Posts