300 கிலோ எடை கொண்ட  சுறா: காரைக்கால் மீனவர்கள் மகிழ்ச்சி

 

தமிழகத்தில் ஆண்டுதோறும், ஏப்ரல் 15-ந்தேதி முதல் 61 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் ஆழ்கடலில் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில் காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐந்து நாட்கள் கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு இன்று கரை திரும்பினர்.  வலையை எடுத்து பிரித்தபோது அதில்  300கிலோ எடைக்கொண்ட ஒருசுறா மீன்  சிக்கியிருப்பது தெரியவந்தது.

இது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள் 300கிலோ எடைக்கொண்ட இந்த சுறாமீன் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போகும் என்றும்  மேலும் இந்த வகைசுறா மீன் மருத்துவகுணம் உடையது எனவும் தெரிவித்தனர்.

 

இதனிடையே காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து பிடித்து வந்த மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் சங்கரா, சீலா, பன்னா, உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

 

 

Related Posts