உலகம்

பின்லாந்தில் 34 வயதுடையவர் பிரதமராக தேர்வு

பின்லாந்து பிரதமராக 34 வயதான சன்னா மரின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பின்லாந்தில் தற்போது 5 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணிக்கு சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமை வகிக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி மீது விமர்சனங்கள் எழுந்தன. தொடர் எதிர்ப்பு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த,  34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற அதிகம் உழைக்க வேண்டி உள்ளதாக சன்னா மரின் கூறியுள்ளார்.

Show More

Related News

Back to top button
Close