341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கோரி வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன

 காவிரி டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் வேதாந்தா மற்றும்  ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் தற்போது புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுசூழல் அனுமதிகோரி மத்திய சுற்றுசூழல் துறையிடம் விண்ணப்பித்துள்ளன. காவிரிப்படுகையில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில்மட்டுமே ஸ்டெர்லைட்   காப்பர் உருக்கு ஆலை வைத்திருந்த வேதாந்தா நிறுவனம், தமிழகத்தில் முதல்முறையாக எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  வேதாந்தா நிறுவனம். 274 கிணறுகளை ஆழமற்ற கடல் பகுதியான காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் நிலப்பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல இந்த பகுதிகளில் 67 எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.  இதற்காக வேதாந்தா நிறுவனம் ஆயியரத்து 300 கொடியும், ஓ.என்.ஜி.சி நிறுவனம் 5ஆயிரத்து 150 கோடியும்முதலீடு செய்துள்ளன. . தமிழகத்தில் 2 மண்டலங்கள்  உட்பட இந்தியாவில் மொத்தமாக 44 மண்டலங்களில் வேதாந்தா நிறுவனம் எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொள்கையின்படி, ஒரு கிணறு அமைக்கப்பட்டால் அதிலிருந்து மீத்தேன், ஈத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்களை எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே, தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழமற்ற கடல்பகுதியில் சில கிணறுகளை அமைத்து எண்ணெய் வளங்களை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வேதாந்தா நிறுவனமும் ஆழமற்ற பகுதியில் எண்ணெய் கிணறுகளை அமைக்க விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts