36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

 துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

      மத்தியப்பிரதேசம் இந்தூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது ஆரிப் என்பவரை சோதனை செய்த போது, அவரது பையில் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 1 கிலோ தங்கம் மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. துபாயில் இருந்து இந்தூருக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

      இதேபோல், சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, இலங்கையை சேர்ந்த சுரேந்திரன், ராஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts