39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி  பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெற்றி 

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில்,  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21க்கு14, 21க்கு 7 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை சயாகா தகாஹஷியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 28 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 12க்கு 21, 21க்கு11, 21க்கு17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் யுவை வீழ்த்தினார் .இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21க்கு13, 17க்கு 21, 21க்கு18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சகாய் கஜூமசாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 16க்கு 21, 20க்கு22 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து  வெளியேறினார்

Related Posts