4 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

போரில் தாக்குதலுக்கு பயன்படும் 4 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்களை, ஒப்பந்தப்படி அமெரிக்கா இன்று இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவில் இருந்து, போயிங் ஏஹெச்-64இ அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதில், ஒரே ஒரு ஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப் படையிடம் கடந்த மே மாதம் 10ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை, அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து, ஏர் மார்ஷல் புட்டோலா பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 4 ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 4 அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்கள், அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியாவுக்கு வந்தன. இவை உரிய சோதனைக்குப் பிறகு, பதான்கோட் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. ஏற்கெனவே, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை இயக்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக, இந்திய விமானப் படை குழுவுக்கு, அலபாமாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர் எனக் குறிப்பிடப்படும், அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரில் இரு வீரர்கள் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 10 ஆயிரத்து 433 கிலோ எடையையும் தாங்கும். மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இலக்குகளை துல்லியமாகக் குறிவைக்கும் தொழில்நுட்பம் இதில் உண்டு. வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள், ஒரே நேரத்தில் ஆயிரத்து 200 ரவுண்டுகள் வரை சுடக் கூடிய 30 எம்எம் இயந்திர துப்பாக்கி, , டாங்குகளை தாக்கி அழிக்கக் கூடிய ஹெல்பயர் ராக்கெட்டுகள் ஆகியவை இந்தஹெலிகாப்டர்களில் இருக்கும். இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்க உதவும் தொழில்நுட்பமும் இந்த ஹெலிகாப்டரில் உள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts