4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் 

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பிரசாரம் செய்யலாமா என்று தேர்தல் ஆணையத்திடம்  அரசியல் கட்சியினர் விளக்கம் கேட்டு இருந்தனர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிப்படி இன்று மாலை 6 மணியுடன்  அங்கு பிரசாரம் முடிவடைவதாக கூறினார். எனவே இடைத்தேர்தலை காரணம் காட்டி அங்கு பிரசாரம் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.    4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியில் இருந்து வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்யக் கூடாது என்றும்  அதன்பிறகு இந்த 4 தொகுதிகளிலும் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம் எனவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

Related Posts