4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம்

இரட்டை இலை  சின்னம் கோரி அமமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இரட்டை இலை சின்னத்தை ஆளும் கட்சியான அதிமுகவுக்கே  ஒதுக்கி  உத்தரவு பிறப்பித்தனர்.  இதையடுத்து அம்முகவுக்கு குக்கர் சின்னம் வழங்கக்கோரி டி.டிவி தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்  கட்சியை பதிவு செய்யாத காரணத்தால் குக்கர் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தேர்தலில் போட்டியிட சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேச்சையாக பரிசுப்பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை வழங்க கோரி  டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

 

Related Posts