4 தொகுதி இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து  மே 1-ம் தேதி முதல்வர் பிரச்சாரம்

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி, 18 சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடுப்பட்டு போன மேலும் 4 சட்டமன்ற தொகுதிக்கும்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில்  இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, வருகிற மே மாதம் 19ம் தேதி, ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்  என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல்  கடந்த 22ம் தேதி  தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும்  திமுக, அதிமுக, அமமுக கட்சிகள் சார்பில் 4 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில்  சூலூர் தொகுதியில்  வி.பி.கந்தசாமி,  அரவக்குறிச்சியில், வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.‘இந்நிலையில், 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில்  ஈடுபட உள்ளார். இதன்படி சூலூர் தொகுதி வேட்பாளர்  வி.பி.கந்தசாமியை ஆதரித்து  மே-1 மற்றும் 14-ம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி  வாக்கு சேகரிக்கிறார். மேலும், அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து மே-6 மற்றும் 11-ம் தேதிகளிலும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து  மே-5,மற்றும் 13-ம் தேதிகளிலும்,  ஓட்டப்பிடாரம்  தொகுதி அதிமுக வேட்பாளர்  பெ.மோகனை ஆதரித்து மே-7 மற்றும் 12-ம் தேதிகளிலும் முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரிக்கவுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள்  இன்னும் அறிவிக்கப்பட்டவில்லை,

Related Posts