4 தொகுதி இடைத்தேர்தலில் ஏப்ரல் 27, 28  தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது: சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. மே 2-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகல் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Related Posts