4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை மே ஒன்றாம் தேதி தொடங்க உள்ளார் மு.க. ஸ்டாலின்

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான களத்தில் திமுக அணியின் பணி இனிமையாக அமைந்ததாக அவர் பாராட்டியுள்ளார்.

இதற்காக திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகள், போட்டியிட வாய்ப்பு அமையாத சூழல் ஏற்பட்ட போதும் திமுகவின் வெற்றிக்காக செயலாற்றிய கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இதயமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அயராத உழைப்பிற்கும், மக்கள் தந்த ஆதரவிற்கும் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும் என்று கூறியுள்ள அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கவனம் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts