4 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பரமணியன் உள்பட 4 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

இமாச்சலப்  பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பரமணியனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதேபோல், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர்பட், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைமை நீதிபதி முரளி கிருஷ்ணா ஆகியோரையும் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் 4 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதிவியேற்றுகொண்டனர்.

Related Posts