4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடற்கரைப் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென செய்திக்குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts