4-ம்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, மே 19-ந்  தேதி வரை நடைபெறுகிறது. . கடந்த 11, 18 மற்றும் 23 தேதிகளில் மூன்று கட்டமாக, மொத்தம் 303 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள  17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோன்று, பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3தொகுதிகளுக்கும், ஜம்மு- காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Related Posts