40 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் 40 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், 40 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது. இதனால், எல்லைப் பகுதியில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், தீவிரவாதிகளை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Related Posts