4,000 நீதிபதிகள் நியமனம் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு

நாடு முழுவதும் காலியாக இருந்த 6,000 நீதிபதிகளுக்கான இடங்களில் 4,000 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நாடு முழுவதும் உள்ள 6,000 விசாரணை நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதனை நிரப்புவதற்காக 4,000 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் கூடுதலாக 1500 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Related Posts