45வது நாளாக அத்திவரதர் தரிசனம்

காஞ்சிபுரத்தில் 45வது நாளாக அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பன்னீர் ரோஜா நிற பட்டால் அத்திவரதருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அத்திவரதர் வைபவம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளதால், இரவு முதலே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். வரும் 17-ஆம் தேதி மாலை அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இன்று அத்திவரதரை தரிசித்துவிட்டு வந்த விமலா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Related Posts