47 போட்டிகளிலேயே 27-வது வெற்றியைப் பதிவு செய்தார் விராத் கோலி

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதை அடுத்து, கேப்டன் விராத் கோலி சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஆன்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் கோலி சில சாதனைகளை படைத்திருக்கிறார். வெளிநாட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்னும் சாதனையை கங்குலி படைத்திருந்தார். அவர் கேப்டனாக இருந்து 11 வெற்றிகளைப் பெற்றிருந்தார். இந்நிலையில், 12 போட்டிகளில் வெற்றி பெற்று அந்தச் சாதனையை கோலி முறியடித்துள்ளார். அதோடு, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையை தோனியுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 27 வெற்றிகளைப் பதிவுச் செய்துள்ளார் தோனி. 47 போட்டிகளிலேயே 27-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் கோலி.

Related Posts