490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரை அடுத்த புகழுரில் சுமார் 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர்  மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த புஞ்சை புகழுர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது  அப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாகும். இந்நிலையில் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக தமிழக முதல்வரிடம் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் புஞ்சை புகழுர் பகுதியில் கதவணை கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் புஞ்சை புகழுர் பகுதியில் கதவணை கட்டுவதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

Related Posts