5ஆம் கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் 65 சதவிதம் வாக்குகள் பதிவு

17-வது  மக்களவைக்கான  தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  இதில் 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில்  5ஆம்கட்டமாக,  51 தொகுதிகளில்  நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.  உத்தரப்பிரதேசத்தில்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்ஸ்மிருதி இரானி போட்டியிடும் அமேதி தொகுதி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி களம் காணும் ரேபரேலி தொகுதி, மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங்கின்  லக்னோ தொகுதி உள்ளிட்ட 14 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் 12தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசம்மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 7 தொகுதிகளிலும் பீகாரில் 5தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளிலும் ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகளிலும்வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 94 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். ஜார்க்கண்டின் ஹசாரிபாக் தொகுதியில் 105 வயதுமூதாட்டி ஒருவரை மகன் தோளில் சுமந்துவந்து வாக்களிக்க செய்தார். ஜார்க்கண்டின் ஹசாரிபாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும்வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா, அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார். அவரது தந்தையும் முன்னாள்மத்திய அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா, மனைவி நீலம் சின்ஹா ஆகியோரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். பகுஜன் சமாஜ் கட்சிதலைவர் மாயாவதி, உத்தரப்பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் வாக்களித்தார். இதேபோல, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தான் போட்டியிடும்லக்னோ தொகுதியில் வாக்கினை பதிவு செய்தார். பீகாரின் சாப்ரா தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தைஉடைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக்  தொகுதியில் வாக்குப்பதிவுதொடங்கிய சிறிது நேரத்தில், ஒரு வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசப்பட்ட்தால் பதற்றம் ஏற்பட்ட்து. ரஹ்மூ பகுதியில் நடத்தப்பட்ட இந்ததாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல் சோபியான் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில்இருந்த 2 பள்ளி கட்டிடங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு  வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.   5 ம் கட்டமாக 51 மக்களவைத்தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 65 சதவீத்த்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts