5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு அலுவலகங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு, அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts