5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் : காங்கிரஸ் கட்சி முன்னிலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. தெலங்கானாவில்சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ரஷ்டிரிய சமிதி  ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதில் மத்திய பிரதேசம், , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிமுன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அவர் போட்டியிட்ட கஜ்வெல் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். ராஜஸ்தானில் தற்போதைய நிலவரப்படி அங்கு காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 68இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போது ராஜஸ்தானில் வசுந்தர ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின.  தற்போதைய நிலவரப்படி பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 55 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த 2013ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இங்கு பா.ஜ 21 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 108 இடங்களிலும், பாஜக 110 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிசோரமில், 40 தொகுதிகளில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 9 இடத்திலும், மிசோ தேசிய முன்னணி 25 இடத்திலும் முன்னிலையில்

Related Posts