57 கோடி ரூபாய் மதிப்பிலான ஓவியங்களை விற்க அனுமதிக்கோரி அமலாக்கத்துறை மனு

வைர வியாபாரி நீரவ் மோடியின் 57 கோடி ரூபாய் மதிப்பிலான ஓவியங்களை விற்க அனுமதிக்கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த மாதம் நீரவ் மோடியின் சொத்துக்கள் சிலவற்றை கையகப்படுத்தியது. அதில் 57 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பிலான ஓவியங்கள், சொகுசு கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள், பைகள் உள்ளிட்டவை கையகப்படுத்தப்பட்டன.

இதில் ஓவியங்களை பாதுகாப்பது அவற்றின் உரிய விலையை விட அதிக செலவாகும் என்பதால் அவற்றை விற்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட மும்பை தனி நீதிமன்றம், மனு மீதான விசாரணை வரும் 5 ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டது.

Related Posts