6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
வீட்டு வசதி மற்றும் புறநகர் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டார்.
சுற்றுலாத்துறை இயக்குநராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறை இயக்குநராக மதிவாணன் நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக கார்த்திக்கேயன் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் மற்றும் சி.இ.ஓ.வாக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் சந்திரசேகர் சக்கமுரி நகர்-ஊரமைப்பு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Related Posts