6 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் படுகொலை:லிபியாவில்

லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் படுகொலை செய்து விட்டதாக தகவல் விளியாகியுள்ளது.

லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த பகுதியை கடந்த ஆண்டு ராணுவம் கைப்பற்றியதை அடுத்து ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பின்னர் அந்த பகுதியில் அவ்வப்போது ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு 10 பேரை பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர். நகரை விட்டு வெளியேறும் முன்பு சில ராணுவ வீரர்களை கொன்றதாகவும், சிலரை கடத்திச் சென்றதாகவும் ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதனை அந்த மாவட்ட அதிகாரி உறுதி செய்துள்ளார். ஐஎஸ் அமைப்பிடம் உள்ள பணயக் கைதிகள் மற்றும் ராணுவத்திடம் உள்ள பயங்கரவாதிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts