6 மணி நேரத்திற்குப் பிறகு கரை ஒதுங்கிய சித்தார்தாவின் சடலம்

தொழில் நெருக்கடி மற்றும் கடன் சுமை காரணமாக கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்தா மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம், 36 மணி நேரத்திற்குப் பிறகு கரை ஒதுங்கியது.

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான வி.ஜி.சித்தார்த்தா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஃபே காஃபி டே என்ற பெயரில், காஃபி கடைகள் நடத்திவந்தார்.

இந்நிலையில், மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்று பாலம் அருகே கடந்த29ஆம் தேதி காரில் சென்ற சித்தார்த்தா திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டது. அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், 25 நீச்சல் வீரர்கள் அடங்கிய 200 பேர் கொண்ட குழுவினர், சித்தார்த்தாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஒன்றரை நாட்களாக தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில், சித்தார்தா குதித்த இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அவரது சடலம் கரை ஒதுங்கியது.

சடலத்தை மீட்ட போலீசார், உறவினர்கள் மூலம் அது சித்தார்தா தான் என்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து அவரது சடலம் மங்களூருவில் உள்ள வென்லாக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சொந்த ஊரான சிக்மகளூருவில் சித்தார்தாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

Related Posts