6- ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு

17-வது மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல்கள் ஏற்கனவே  நடந்து முடிந்து விட்ட நிலையில், 6-ம் கட்டமாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் , டெல்லி, ஹரியானா ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 59மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், திக்விஜய் சிங், ஜோதிர்ராதித்யா சிந்தியா, ஷீலா தீட்சித், மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்,உள்பட 968 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலில் இறுதிக்கட்டமாக மேலும் 59 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Posts