6- ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

17-வது மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஏற்கனவே  முடிந்து விட்ட நிலையில், 6-ம் கட்டமாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் , டெல்லி, ஹரியானா ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்தத் தேர்தலில்  மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், திக்விஜய் சிங், ஜோதிர்ராதித்யா சிந்தியா, ஷீலா தீட்சித், மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், உள்பட 968 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  ஆறாம் கட்ட தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக  பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. உள்ளிட்ட தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் இறுதிக்கட்டமாக மேலும் 59 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Related Posts