6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.
‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய கெய்ல், இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார்.. முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது.

பின்னர் 255 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ரோகித் சர்மா 10(6) ரன்னில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகார்தவான் 36(36) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷாப் பாண்ட் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் விராட் கோலி 48 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

முடிவில் இந்திய அணி 32.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டக்வொர்த் லூயிஸ் முறையில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

Related Posts