காவிரி விவகாரம்: நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

 

 

காவிரி பிரச்சினை தொடர்பாக,  அனைத்து கட்சி தலைவர்களுடன் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-17

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில் சென்னை வந்த மோடிக்கு கருப்பு கொடி காண்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில்,காவிரி பிரச்சினை தொடர்பாக, தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திட நேரம் ஒதுக்கித் தருமாறு, பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் இன்று  கடிதம் எழுதியுள்ளார். அதில், காவிரி உரிமையை தமிழக அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். காவிரி விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தெரிவிக்க நேரம் ஒதுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். கர்நாடக தேர்தலுக்காக காத்திருக்காமல், உடனடியாக காவிரி வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலரை கண்டிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Posts