68 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய மன்னர் பதவியேற்ப்பு: பெயர்கள் தங்கதட்டில் பொறிக்கும் வைபவம்

தாய்லாந்து நாட்டில் 68 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய மன்னர் பதவியேற்கவுள்ளதையொட்டி அவரது பெயர், பட்டங்கள் உள்ளிட்டவற்றை தங்கத் தகட்டில் பொறிக்கும் வைபவம் நடைபெற்றது.

தாய்லாந்து நாட்டின் அரசர், பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.

இந்நிலையில் அவரது மகன் மகா வஜ்ரலங்கோன் தாய்லாந்தின் புதிய அரசராக பதவியேற்கவுள்ளார்.

மே மாதம் 4 முதல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ள பிரம்மாண்ட முடிசூட்டு விழாவின் ஒருபகுதியாக, புதிய அரசரின் பெயர், பட்டங்கள், ஜாதகம் உள்ளிட்டவற்றை தங்கத் தகட்டில் பொறிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. பேங்காக் நகரிலுள்ள புத்தர் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசவை சோதிட வல்லுநர்கள், புத்த துறவிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 1950ம் ஆண்டுக்கு பிறகு தாய்லாந்து நாட்டில் புதிய அரசரின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts