69சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்

69சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

69சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் நவம்பர் மாதம் விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, 69சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் சமூக நீதியில் அக்கறை கொண்ட நீதிபதிகளை நியமித்து உச்சநீதிமன்றத்தில் திறமையாக வாதாடி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற் கொள்ள வேண்டும் என கூறினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டில் திணக்கப்பட்டுள்ள கிரீமிலேயரை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வீரமணி தெரிவித்தார்

Related Posts